பெங்களூரு குற்றவாளியின் புதிய படங்கள் வெளியீடு: என்ஐஏ அதிரடி

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. குற்றவாளி தொடர்பான துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் தீவிரமாக செயல்பட்டுவந்த பல்லாரி கவுல் பஜார் துணி வியாபாரி முகமது சுலைமான் உட்பட 4 பேரிடம் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்துகிறது.

இந்நிலையில், என்.ஐ.ஏ குண்டு வைத்தவரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த மார்ச் 1ம் தேதியன்று இரவு 9.01 மணிக்கு பல்லாரி பேருந்து நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. அந்த நபரின் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள என்.ஐ.ஏ, அந்த நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை கோரியுள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு