பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!!

பெங்களூர்: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் ராமகிருஷ்ணா என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் டிராலி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விமான நிலையத்திற்கு வெளியில் டிராலியை அடுக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் விமான நிலையத்துக்குள் புகுந்த ரமேஷ் என்ற நபர் ராமகிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்திய நிலையில் அவர் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். ஊழியரை கொன்றுவிட்டு தப்ப முயன்ற ரமேஷ் என்பவரை பாதுகாப்பு படையினர் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், ரமேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ரமேஷ்க்கும் அவரின் மனைவியும் இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர் என்று தெரியவந்தது. அதோடு ரமேஷ் மனைவியுடன் ராமகிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பதாக ரமேஷ் சந்தேகப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் ராமகிருஷ்ணாவிற்கு தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ராமகிருஷ்ணா விமான நிலையத்தில் வேலை செய்வதை தெரிந்து கொண்டு ரமேஷ் கத்தியுடன் காலையிலேயே விமான நிலையத்திற்கு வந்து இக்கொலையை செய்துள்ளார்.

Related posts

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது