பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. கைது செய்யபட்ட 5 பேரும் தீவிரவாதிகளா என பெங்களூரு குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் பெங்களூரு நகரில் வெடிகுண்டு தக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநில மத்திய குற்றபிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகளாக இருக்ககூடும் என மத்திய குற்றபிரிவு போலீசார் சந்தேகித்துள்ளனர். கைது செய்யபட்ட 5 பேரிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நேற்றைய தினம் தேசிய அளவில் எதிர்கட்சிகளின் கூட்டமானது நடைபெற்றது. இந்த நிலையில் சையத் சுஹெல், உமர் ஜானித், முதாசிர்,ஜாஹித் ஆகிய 5 பேரை கர்நாடக மாநில போலீசார் து செய்துள்ளனர். கைதன 5பேரும் 2017-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யபட்டு பெங்களூரு பரப்பன அகரஹார சிறைசாலையில் இருந்தனர். சிறையில் இருந்த போது தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு நகரில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் தீவிரவாதிகளா என கர்நாடக மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்

நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!!

செங்கல்பட்டில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்