பெங்களூருவில் அணில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் அரசு பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு நகரில் அணில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென அரசு பேருந்தில் இருந்த இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு பயணிகளை கீழே இறங்க வலியுறுத்தினார். இதனை அடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகள் உடனடியாக கீழே இறங்கி தப்பிஓடினர்.

அதே நேரத்தில் பேருந்தில் இருந்த தீ மளமளவென பரவியது. இதனை தொடர்ந்து ஓட்டுனர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போரடி தீயை அனைத்தனர். இன்ஜின் அதிகமக சூடான காரணத்தல் இந்த தீ விபத்து ஏற்படிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் இன்றி பயணிகள் அனைவரும் தப்பியுள்ளனர்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை