பாதாம் பிசினின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

*பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது.

*பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.

*மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

*பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். உடலின் அதிக சூட்டை தணிக்கிறது.

*பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் 90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம். இதனால் எடை தூக்குபவர்கள் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்

*பாதாம் பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவையும் முறைப்படுத்துகிறது. பாதாம் பிசினை உணவில் வழக்கமாக எடுத்துக்கொண்டால், கொழுப்பை குறைப்பதுடன், உடலில் ரத்தத்தின் அளவையும் பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

*பாதாம் பிசினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்துக்களும், மினரல்களும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பை பலப்படுத்துகிறது.

*சருமத்தை ஃப்ரி ரேடிக்கல்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த ஃப்ரி ரேடிக்கல்களே இளம் வயதிலே வயோதிக தோற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் இரண்டும், சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக உள்ளன.

*பாதாம் பிசின், உடல் வலி மற்றும் முதுகு வலிகளை குணப்படுத்துகிறது. இதனால் தசைகள் வலுவடைகிறது. இது உடலில் ஆரோக்கியமான தசைகள் உருவாக வழிவகுக்கிறது.

*இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளுக்காக இதை தினமும் உட்கொள்ளலாம்.

தொகுப்பு: தவநிதி

Related posts

நடிகர் விக்ரம் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்!

ஹெட்போன் ஆபத்து… அலெர்ட் ப்ளீஸ்!