வைகோ உடல் நலம் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்: துரை வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அறிந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை அழைத்து தலைவர் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய பிறகு, நேரில் சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோவுக்கு இன்று நடக்க இருப்பது சிறிய அறுவை சிகிச்சைதான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவருக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்போது நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார். எனவே அவரைப் பற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் பூரண நலம் பெற்று வைகோ இல்லம் திரும்புவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு