Thursday, July 4, 2024
Home » அழகு என்ற சொல்லுக்கு முருகா!: முருகப்பெருமான் பற்றிய அரிய தகவல்கள்..!!

அழகு என்ற சொல்லுக்கு முருகா!: முருகப்பெருமான் பற்றிய அரிய தகவல்கள்..!!

by Kalaivani Saravanan

* முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவன் முருகன். தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன்.

* முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம். 3. முருகனை பூஜிப்பதற்கு சிறப்பு பெற்ற தலங்கள் அறுபடை வீடுகள்.

* முருகனை பூஜிப்பதால் சிறப்பு பெற்ற தலங்கள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்கு பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

* ஆடி மாதம் திருக்கல்யாணம் நடைபெறும் விருத்தாசலம் பழமலை நாதர் திருக்கோவிலுக்கு வேலைப்பாடுகளுடன் கற்றளிகளை எடுத்தவர் கண்டராதித்த சோழரின் துணைவியான செம்பியன் மாதேவியார். ராஜராஜ சோழனின் பெருமை மிகு பாட்டியார். இந்த விருத்தாசலத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் பழமலைநாதருக்கு நான்கு திசைகளிலும் காவலாக முருகப்பெருமானே உள்ளார். கொளஞ்சியப்பர், வேடப்பர், வெண்மலையப்பர், கரும்பாயிரம் கொண்ட அப்பர் என ஆண்கள் அழைக்கப்படுகிறார்கள். இதில் கொளஞ்சியப்பர் கோவிலில் மூல விக்கிரகம் கிடையாது. வெறும் பீடத்தையே முருகனாக நினைத்து வணங்குவர்.

* சிவனுக்கு வில்வ இலை கிள்ளி வைத்து அர்ச்சித்தாலே சிவப்பேறு கிடைக்கும். சுப்பிரமணியர் திருச்செந்தூர், திருவிடைக்கழி ஆகிய இடங்களில் சிவ பூசை செய்து பேறு பெற்றார்.

* திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடாகும். இங்கு கோவில் கொண்டுள்ள மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது. மேலும் ஒரு சிறப்பாக, ஒரு லட்சம் ருத்திராட்சக் கொட்டையால் ஆன ருத்திராட்ச மண்டபத்தில் உற்சவர் வாசம் செய்கிறார்.

* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மையுண்டாகும்.

* கந்த புராணத்தில் வரும் சுப்ரமண்ய தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும். பாவங்கள் விலகி சகல விதமான நன்மையும், இறுதியில் மோட்சமும் கிடைக்கும். செவ்வாய் தோஷமுடையவர்கள் இதை படிக்க மிகவும் நன்மை பயக்கும்.

* முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் உகந்த நாட்கள் ஆகும்.

* திருவையாறில் உள்ள முருகப்பெருமான் தனுசு சுப்பிரமணியம், வில்வேள் நாயனார் என்னும் பெயருக்கு ஏற்றாற்போல் வில் மற்றும் படைக்கலங்கள் அனைத்தையும் ஏந்தியவராக காட்சி கொடுக்கிறார். மேலும் இங்குள்ள ஆட் கொண்டார் சன்னதியில் சதா சர்வ காலமும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கிறது.

* செந்தமிழ் முருகனது கையைச் சார்ந்துள்ள உருவம் வள்ளி நாச்சி யாருடையது.இதனால் ‘வானுதல் கணவன்’ என்ற பெயரிட்டு அழைக்கப்படுகின்றார்.

* முருகக்கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்.

* கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெரு மக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

* முருகப் பெருமானை முருகு, வனப்பு, எழில்,ஏர், கவின், அழகு முதலிய சொற்களால் அழைக்கிறார்கள்.

* முருகன் பற்றிய பல செய்தி கள் கோவிந்தையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம் ஆகிய இரண்டிலும் உள்ளன.

* தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிலக்கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற் கொடி யோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

* சென்னைக்கு அருகிலுள்ள சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ஆசியவியல் கல்வி நிறுவனம் தமிழக வரலாற்று ஏடுகளைக் கொண்டும்,பல்வேறு சான்றுகளைக் கொண்டும் முருகக்கடவுள் பற்றிய பலகோண ஆய்வுகளை நடத்தி உள்ளது.

* நம் தமிழர்கள் பசிபிக், சிஷில்ஸ்,பிஜி, மடகாஸ்கர் நாடு களுக்குள் குடி பெயர்ந்து முருகனை அங்கே கொண்டு சென்று வணங்கி வந்துள்ளனர்.

* அகநானூற்றில் முருகன் என்ற பெயர் பல பாடல்களில் வருவதை பார்க்கலாம்.

* பஞ்சகலா மந்திரம்,2.பஞ்சப்பிரம்ம மந்திரம்,3.ஷடங்க மந்திரம்,4.சம்மிதா மந்திரம்,5.மயில் மந்திரம் ஆகியவை முருகனுக்குரிய மந்திரங்களாகும்.

* அக்னி தேவனையும்,சூரன் உடன் பிறப்பில் ஒன்றான கோழியையும் கொடியாகக் கொண்டவன் செந்தமிழ் முருகன்.

* மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோர் பெயர் உள்ளது.

* விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன் எம் பெருமாள். விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

* முருகனது வலது கரத்தில் உள்ளது தாமரை, அபயம், தண் டம்,சக்தி,(வச்சிரம்)சக்தி. திருமுருகனது இடது கரத்தில் உள்ளது வச்சிரம், சக்கரம், வச்சிரம்,வச்சிரம்,சூலம்.

* முருகனின் கோழிக் கொடிக்குக் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்த கோழியே வைகறைப் பொழுதில் ஓங்கார மந்திரத்தை ஒலி வடி வில் உணர்த்துவது ஆகும்.

* கவுமாரன் எனப்படும் முருகனுடைய பெண் அங்கமாகக் கவுமாரி என்ற தேவி சப்த மாதருள் குறிப்பிடப்படுகிறாள்.

* முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங் கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப்பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவணபவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை மகளிரால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாய் ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

* குமரக் கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

* அழகன் முருகனின் வேறு பெயர்கள். வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரவுஞ்ச் போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாபதி, காக வாகனன், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் என்பனவாகும்.

* இயற்கை அழகினில் கோவில் அமைத்து இறைவழிபாட்டுக்கு நாயகனாக முருகனையே தோற்றுவித்தான் பழந்தமிழன் என்பது சங்க காலச் செய்தி.

You may also like

Leave a Comment

nineteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi