அழகிய கன்னங்களுக்கு அருமையான டிப்ஸ்

அழகு என்பது எல்லோருமே விரும்பக்கூடிய ஒரு விஷயம். அழகுக்கு அழகு சேர்ப்பது குண்டு குண்டு கன்னங்கள் தான். பலரைப் பார்த்து நாம் பொறாமைப் பட்டு இருப்போம். எப்படி இருக்கு பாருங்க கன்னம். புசு… புசுன்னு ஏன் உங்கள் கன்னமும் அதே போல் ஆகலாம். ஆக்க முடியும். அதற்கு இந்த ஆறு டிப்ஸ் போதுமே.
1. ஆப்பிள் மற்றும் கேரட் துண்டுகளை அரைத்து ஜூஸ் ஆக எடுத்து கொண்டு அதில் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கொழுகொழு கன்னங்களை பெறலாம்.
2. ஆப்பிளை தோல் சீவி நன்கு அரைத்து அதை கன்னத்தில் எல்லா பகுதியிலும் வாரம் 3 முறை ஃபேஷியல் செய்து வருவதால் குண்டான கன்னங்களை பெறலாம்.
3. தினமும் குளிப்பதற்கு முன்பு 1 ஸ்பூன் வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து அதை கன்னங்களில் பேஷியல் செய்து வர ஒட்டிய கன்னங்கள் குண்டாக மாறும்.
4. பப்பாளியுடன் தேன் கலந்து அதை கன்னத்தில் நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதுபோல் செய்து வந்தால் குண்டான கன்னங்களை பெறலாம்.
5. ஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணெய், இவற்றுடன் பார்லி தூள் சேர்த்து நுரை வரும்வரை நன்கு கலந்து பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் கொழுகொழுகன்னம் கிடைப்பதோடு முகம் பொலிவு பெறும்.
6. காலையில் எழுந்ததும் வாய்க்குள் காற்றை நிரப்பிக் கொண்டு அந்த காற்றை மெதுவாக விடுவது போல் தினமும் 10 முறை செய்து வந்தால் ஒட்டிய கன்னம் குண்டாக மாறும்.
மேற்கண்ட டிப்ஸ்களை செய்து விட்டு பிறகு நீங்களே உங்கள் கன்னத்தை கிள்ளி பார்ப்பீர்கள். ஆஹா எவ்வளவு அழகு என்று.
– கவிதா பாலாஜிகணேஷ்

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு