அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் கனமழை பெய்யும் என்பதால் கடற்கரை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியோஞ்சர், சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், சம்பல்பூர், சோனேபூர், பர்கர், ஜார்சுகுடா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், தேன்கனல், கட்டாக், கந்தமால், கலஹண்டி, போலங்கிர், நுவாபாடா, நாயகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் கோடைக் காலத்தில் வாட்டி வதைத்த வெப்ப அலை முடிவுக்கு வந்து நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்