தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது: அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது போர்ட் பிளேயருக்கு 520 கி.மீ. தென்மேற்கில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு