வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

டெல்லி: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது நாளை புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையை அடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை உள் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைபெய்தது. மேலும்,பல மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வழுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 23ம் தேதியில் புயலாக வலுப்பெறும் வா்ய்ப்பும் உள்ளது. அப்படி வலுப்பெறும் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுபெற்றது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை புயல் உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ல் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம்

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்