மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை


அம்பை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. மணிமுத்தாறு பகுதியில் இன்று காலை வரை 22.8 மிமீ மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.75 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 264 கனஅடி நீர் வருகிறது. வினாடிக்கு 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி