கூடைப்பந்து வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள்

திருவண்ணாமலை : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் கூடைப்பந்து வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள் திருவண்ணாலையில் நடந்தது.கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் தேசிய அளவில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, அடுத்த மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில், தமிழ்நாட்டு அணியின் சார்பில் விளையாட தகுதியுள்ள வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, கூடைப்பந்து போட்டிக்கான தமிழ்நாடு அணியில் விளையாட தகுதியுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டிகள் திருண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. அதன்படி, முதல் நாளான நேற்று கூடைப்பந்து பெண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் போட்டிகள் நடந்தது. அதில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 131 இளம் வீரர்கள் கலந்துகொண்டனர்.

சுற்றுவாரியாக நடத்தப்பட்ட தகுதிப் போட்டியில் வெற்றிபெற்ற 18 பேர் மாநில அணிக்கான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அணியின் கூடைப்பந்து ஆண்கள் பிரிவுக்கான வீரர்களை தேர்வு செய்யும் தகுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில், 148 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். வீரர்களை தேர்வு செய்யும் பணியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஈடுபட்
டனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது