பாருக்கு மது விற்றவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் உரிமம் பெற்ற மதுக்குடிப்பகத்தில் மது குடித்த இருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலந்திருந்தது தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அரசு உரிமம் பெற்ற மதுக்குடிப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு எவ்வாறு கலக்கப்பட்டது. பார்கள் மது குடிப்பதற்கான இடங்கள் மட்டும் தான். அங்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது தான் விதி.

அவ்வாறு இருக்கும்போது, அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். பாருக்கு மது விற்பனை செய்த பணியாளர்கள் முதல் டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர் வரை அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு

நீண்ட இடைவெளிக்கு பிறகு மூணாறுக்கு படையப்பா ‘ரிட்டர்ன்’

புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்