வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.29.75 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: மும்பையை சேர்ந்த புகழ் பெற்ற வைர வியாபாரியான நீரவ் மோடி(53) பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வங்கி கடன் மோசடி குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் முகுல் சோக்சி இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடினர்.

இந்த வழக்கில் நீரவ் மோடி கடந்த 2019ம் ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தி இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வங்கி கடன் மோசடி குறித்து விசாரணை நடததி வரும் அமலாக்கத்துறை, நீரவ் மோடிக்கு சொந்தமான வங்கி டெபாசிட்கள், நிலம், கட்டிடம் உள்ளிட்ட ரூ.29.75 கோடி மதிப்பிலான சொத்துகளை அதிரடியாக பறிமுல் செய்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்