பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குவங்கியாளர்கள் விரைவாக கடன் வழங்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் வங்கியாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

கடந்த 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக்கடன், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட உதவிகளை வழங்கிடவும், காப்பீட்டு நிறுவனங்கள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு காப்பீட்டுத் தொகையை வழங்கிடவும் கடிதம் எழுதியுள்ளார்.

வங்கியாளர்கள் விரைவாக எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மிகைப்பற்று மற்றும் கடன் உதவிகளை வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்தினர்எஸ்எம்இ நிறுவனங்களின் இயந்திரங்கள், மூலப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்து, இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது