தவறுதலாக வங்கி கணக்கில் வந்த பணம் செலவழிப்பு ₹2 லட்சத்தை திருப்பி கேட்டதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

சமயபுரம்: ஒரு வருடத்திற்கு முன் தவறுதலாக வங்கி கணக்கில் வந்த ₹2 லட்சத்தை செலவு செய்த காய்கறி வியாபாரியிடம் அதிகாரிகள் திருப்பி கேட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(51). காய்கறி வியாபாரி. இவருக்கு கனரா வங்கி முசிறி கிளையில் கணக்கு உள்ளது. ஒரு வருடத்திற்கு முன், அவரது கணக்கிற்கு அதே வங்கி கிளையில் இருந்து ₹2லட்சம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. இந்த தொகையை முருகேசன் எடுத்து ஜாலியாக செலவு செய்து விட்டார்.

இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர், தனது கணக்கில் ஒரு வருடத்துக்கு முன் செலுத்திய ₹2லட்சத்தை எடுக்க வந்தபோது அவரது கணக்கில் அந்த தொகை இல்லாததும்,அதே தேதியில் முருகேசனின் வங்கி கணக்கில் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வங்கி மேலாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருடன் முருகேசனின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த முருகேசனிடம், வங்கி கணக்கில் தவறதலாக வரவு வைக்கப்பட்ட ₹2லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கூறி விட்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன், செலவு செய்த பணத்தை திரும்ப செலுத்த வழியில்லாததால் விரக்தியில் இருந்தார். பின்னர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். மயங்கி கிடந்த அவரை மனைவி கலா மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் முருகேசன் இறந்தார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!