வங்கி மோசடியாளர்களுடன் மோடி போஸ்டரால் பரபரப்பு: டெல்லி போலீஸ் வழக்கு பதிவு

புதுடெல்லி: வங்கியில் மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டவர்களுடன் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசிய பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்,‘‘ பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது வாரிசு அரசியலா? மோடிக்கு குடும்பம் இல்லையென்றால் யார் என்ன செய்ய இயலும்?” என்றார்.

அதற்கு பதிலளித்து தெலங்கானாவில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி,‘‘இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் என் குடும்பம் தான்’’ என குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பாஜ தலைவர்கள் பலர் தங்களுடைய சமூக வலைதள முகப்பு பக்கத்தில் மோடியின் குடும்பம் என சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மோடியின் உண்மையான குடும்பம் என்ற பெயரில் டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில்,வங்கி மோசடியில் சம்மந்தப்பட்டு தலைமறைவான நீரவ் மோடி, விஜய் மல்லையா,மெகுல் சோக்ஸி உட்பட குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களின் படங்களுடன் மோடி படத்தை வெளியிட்டுள்ளனர். இது பற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு