வங்கிக்கணக்கு தொடங்க.. லாக்கரை திறக்க.. ரோபோக்களை பயன்படுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்..!!

சென்னை: வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை ரோபோக்கள் வழங்க போகின்றன என்ற தகவலை கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் குறிப்பிட்ட கிளைகளில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு என சேவை வழங்க வேண்டும் என கேட்டறிய உள்ளன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தலைமை செயல் அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவத்சவா இதனை தெரிவித்து இருக்கிறார்.

மறு சீரமைப்பு நடவடிக்கையாக அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தங்கள் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ரோபோக்களை அறிமுக செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் வகையில் ரோபோக்களை வடிவமைக்க ஆலோசனை நாடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். முதற்கட்டமாக வங்கி கணக்கு தொடங்குவது, வாடிக்கையாளர்கள் லாக்கரை திறக்க உதவுவது போன்ற பணிகள் ரோபோக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.

Related posts

ஜப்பானில் 23 ஆண்டுகளாக வெள்ள பாதிப்புகளை தடுக்க உதவும் சுரங்கம்: 100 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிலான நீரை இருப்பு வைக்கலாம்

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

மனித உயிரோடு விளையாட வேண்டாம்; சேதமடைந்த ஆனந்தூர் நூலகத்தை உடனடியாக மூட வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!