வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆடும் பும்ரா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் செப். 19ம் தேதி சென்னையிலும், 2வது டெஸ்ட் 27ம் தேதி கான்பூரில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் ஆகியோர் அணியில் இடம்பிடிப்பதால், சர்ப்ராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. மேலும் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை, வங்கதேசம் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட்டில் மட்டும் ஆட வைத்துவிட்டு ஓய்வு அளிக்கப்படுகிறது.

மேலும் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்தமண்ணில் நடக்கும் 3 டெஸ்ட்டில் 2ல் மட்டும் அவர் ஆடுகிறார். இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பும்ராவின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வங்கதேசம் மற்றும் நியூலாந்துக்கு எதிரான தொடர்களில் அவர் முழுமையாக விளையாட வாய்ப்பு இல்லை என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி