வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: ‘ஹிஜாப்’ எதிர்ப்பு ஆசிரியர்களுக்கு சிக்கல்

டாக்கா: வங்கதேத்தில் ‘ஹிஜாப்’ உடை அணியாமல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த பின்னர், அங்கு இடைக்கால அரசு அமைக்கப்படாலும் கூட ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாணவர்களின் போராட்டக்குழு இடைக்கால அரசில் அங்கம் வகிப்பதால், அவர்களின் அடிப்படைவாத கொள்கையால் வங்கதேச அரசியல் பாதை அடுத்தடுத்த சிக்கல்களை சந்தித்து வருகிறது.

டெல்லியில் உள்ள வங்கதேச தூதர்களை, இடைக்கால அரசு திரும்பப் பெற்றது. டாக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் தங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக்கூறி, மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இவ்வாறாக அடுத்தடுத்த போராட்டங்கள் பட்டியலில், ‘ஹிஜாப்’ உடை அணியாமல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்,பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். சுமார் 100 ‘ஹிஜாப்’ எதிர்ப்பு ஆசிரியர்களின் பட்டியலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். டாக்கா பல்கலைக்கழகம் உட்பட முக்கிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம்: செல்வப்பெருந்தகை காட்டம்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!