எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் வங்கதேச தேர்தலில் மந்தமான வாக்கு பதிவு: 40% வாக்குகள் மட்டுமே பதிவாகியது

டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலை முக்கிய எதிர்க்கட்சி புறக்கணித்த நிலையில் வாக்குசாவடி மையங்களில் குறைவான அளவிலே மக்கள் காணப்பட்டனர். தேர்தலில் 40 % வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிகிறது. வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பாக பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு 4 மணிக்கு முடிவடைந்தது. அதிக ஆர்வம் இல்லாததால் குறைவான அளவிலான மக்கள்தான் வாக்களிக்க வந்தனர். மாலை 3 மணி நிலவரப்படி 27.15% என பதிவாகியது. 4 மணி வரை 40 % வாக்கு பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 2018 தேர்தலில் 80% பதிவாகியது.வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய.

அனைத்து இடங்களுக்கும் முடிவுகள் இன்று காலைக்குள் அறிவிக்கப்படும். தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர்,ஷேக் ஹசீனா கூறுகையில்,‘‘ பிஎன்பி கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபட்ட போதும் மக்கள் வாக்களிப்பதற்கான ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்கியுள்ளது ’’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்