வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் வன்முறையால் எல்லையில் சிக்கியுள்ள 31 தமிழ்நாட்டு மாணவர்களை அழைத்து வர அரசு நடவடிக்கை

வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் வன்முறையால் எல்லையில் 31 தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹில்லி என்ற இடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கியிருந்தனர். வங்கதேசத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களை அவர்களின் கல்லூரி நிர்வாகம் அழைத்து வந்து இந்திய எல்லையில் விட்டுசென்றனர்.

வங்க தேசம் – இந்திய எல்லையை கடந்து மேற்கு வங்கம் வந்துள்ள 31 மாணவ, மாணவிகள் ஹில்லி என்ற எல்லைப்பகுதியில் உள்ளன. 30% இடஒதுக்கீடு அமல்படுத்துவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தை அடுத்து வங்கதேசத்தில் வன்முறை நடைந்து வருகிறது. அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் வன்முறையாக மாறியது. மேற்குவங்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வர அரசு உதவ மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை