சென்னையில் இன்று வங்கதேசம்-நியூசிலாந்து பலப்பரீட்சை

சென்னை: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம்-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 11வது லீக் ஆட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த 2 அணிகள் மற்றும் சென்னையில் நடந்த ஆட்டங்களின் வெற்றி, தோல்வி விவரங்கள் மற்றும் வீரர்களின் பட்டியல் இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துச் செல்லும்.

நேருக்கு நேர்

* சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 41முறை களத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் நியூசி 30 ஆட்டங்களிலும், வங்கம் 10 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

* இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர்பில்லாத 3வது நாட்டில் நடைபெற்ற 9 ஆட்டங்களில் நியூசிலாந்து 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* உலக கோப்பைக்கு சில நாட்களுக்கு முன்பு வங்கத்தில் நடந்த 3 ஆட்டங்களை ஒருநாள் தொடரை நியூசி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை.

* இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5 சர்வதேச ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் நியூசி வென்று இருக்கிறது. மீதி ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.
சென்னையில்…

* வங்கதேச அணி முதல் முறையாக சென்னையில் இன்று களம் காண இருக்கிறது.

* நியூசிலாந்து 1996ம் ஆண்டு உலக கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.

* இந்தியா-நியூசி இடையே 2003ம் ஆண்டு நடைபெற இருந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

* இந்தியா 2010ம் ஆண்டு 8 விக்கெட் வித்தியாச்தில் நியூசியை வென்றது.

* 2011 உலக கோப்பைத் தொடர் லீக் ஆட்டத்தல் நியூசி 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை சாய்த்துள்ளது.

* ஆக சென்னை சிதம்பரம் அரங்கில் நியூசி விளையாடிய 4 ஒருநாள் ஆட்டங்களில் 2ல் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த உலக கோப்பையில்…
* இதுவரை 2 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள வங்கம் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியும், 2வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 137ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தும் உள்ளது.

* நியூசி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் நெதர்லாந்தை 99ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

அணி விவரம்:
* வங்கதேசம்: ஷாகிப் அல் அசன்(கேப்டன்), நஜ்மல் ஹோசைன்(து.கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்ஃபிகுர் ரகிம்(விக்கெட் கீப்பர்கள்), தன்ஜித் ஹசன், தவஹித் ஹரிதய், மெஹேதி ஹசன், மமதுல்லா, மெஹிதி ஹசன், ஹசன் முகமத், முஸ்டாஃபிசூர் ரகுமான், நசும் அகமத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஜிம் ஹசன், தஸ்கின் அகமத்

* நியூசிலாந்து: கேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் லாதம்(தற்காலிக கேப்டன்/விக்கெட் கீப்பர்), டெவன் கான்வே, கிளென் பிலிப்ஸ்(விக்கெட் கீப்பர்கள்), வில்லியம் யங், மார்க் சாப்மேன், டாரியல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், லாக்கி பெர்கூசன், மாட் ஹென்றி, ஈஷ் சோதி, டிம் சவுத்தீ

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!