பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது

செங்கல்பட்டு: பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் செஞ்சி சண்முகம், லாரி ஓட்டுநர் சங்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி மர்மநபர்கள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதாக ஐ.ஜி.ஜோசி நிர்மல் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் எஸ்.பி சந்திர சேகரன் தலைமையிலான போலீசார் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேலூர் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த பாரஸ்ட் லாரி மற்றும் அதன் பின் வந்த காரை சோதனையிட்டபோது சுமார் 35 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து லாரியை ஓட்டி வந்த செஞ்சி சண்முகம், மோகன், அதன் உரிமையாளர் சங்கர் மற்றும் லாரி கிளீனர் ஹரி கிருஷ்ணன் ஆகியோரை சிவில் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட செஞ்சி சண்முகம் என்பவர் ஏற்கனவே பலமுறை ரேஷன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என சிவில் சப்ளை சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை சிவில் சப்ளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு