பந்தலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் வனத்திலிருந்து கரடி அடிக்கடி வெளியேறி இன்கோ நகர், ரிச்மண்ட், அண்ணாநகர், அம்பேத்கார் நகர் உள்ளிட்ட பகுதி வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்டவைகளை தின்று சென்றது. இதனால் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி தேவாலா ரேஞ்சர் சஞ்ஜீவி தலைமையில் வனத்துறையினர் அத்திமாநகரில் கூண்டு வைத்து கடந்த சில நாட்களாக கண்காணித்தனர். ஆனால் கரடி கூண்டில் சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கரடியை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். அதனால் பொதுமகள் நிம்மதி அடைந்தனர்.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்