தேவையானவை:
பழுத்த பூவன் வாழைப்பழம் – 2,
பால் – 2 கப்,
சர்க்கரை – கால் கப்,
மில்க்மெய்ட் – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – கால் ஸ்பூன்.
செய்முறை:
வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும். அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப் பழத்தை சேர்த்து சர்க்கரையைப் போடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் ஏலக்காய்த்தூள், மில்க் மெய்ட் சேர்த்து இறக்கவும். வாழைப்பழம் விரும்பாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவர். சர்க்கரை பிடிக்காதவர்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.