பனங்கிழங்கு லட்டு

தேவையான பொருட்கள்

பனங்கிழங்கு – 6
துருவிய தேங்காய் – 1 கப்
நாட்டுச்சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் – 2.

செய்முறை

பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, நார் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதனால் பனங்கிழங்கின் பிசுபிசுப்புத் தன்மை நீங்கும். அரை மணி நேரம் கழித்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். அதை அகலமான பாத்திரத்தில் கொட்டவும். இப்போது பனங்கிழங்கு மாவுடன் தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான பனங்கிழங்கு லட்டு தயார்.

Related posts

விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்

காளான் பாஸ்தா

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்