குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தமிழகத்தில் மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குட்கா, பான்மசாலா போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பொருட்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால் தடை செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவை கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்படி குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையானது மேலும் ஓராண்டுக்கு அதாவது வரும் 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து