பாமக 36ம் ஆண்டு தொடக்க விழா: அன்புமணி பங்கேற்பு

சென்னை: பாமகவின் 36ம் ஆண்டு தொடக்க விழா மேடவாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் குழந்தைகளுக்கு புத்தகப் பை மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி சட்டமன்ற கூட்டத்தில் முதல்வரும் பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே வலிறிவுறுத்தி இருந்தேன். கர்நாடகாவில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் போட்டு தண்ணீர் தர முடியாது என மறுத்தார்கள். தென்மேற்கு பருவமழை இரண்டு வாரங்களில் தொடங்கி விடும். அப்போது உபரி நீரை திறந்து விட்டு தண்ணீர் கணக்கை சரி செய்ததாக அரசியல் செய்வார்கள், என்றார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்