பாலாற்றில் குளித்த சிறுமி மூழ்கி பலி: 3 குழந்தைகளை காப்பாற்றிய பெண்

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். மதுக்கடை ஊழியர். இவரது தம்பி சசிக்குமார், நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது மகள்கள் மதுமிதா(13), தேஜா(12), அண்ணன் மகள்கள் ரித்திகா(10), திவ்யா(8) ஆகியோரை பாலாற்றில் குளிக்க அழைத்து சென்றுள்ளார். மழை காரணமாக மணல் குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், அவர்களை கரையோரம் அமர வைத்துவிட்டு தண்ணீர் குறைவாக உள்ள பகுதியை பார்த்து வருவதாக சசிக்குமார் சென்றுள்ளார்.

இதனிடையே சிறுமிகள் 4 பேரும் விளையாட்டாக பாலாற்று குட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது ஆழம் அதிகமான பகுதியில் சிக்கி தத்தளித்தபடி கூச்சலிட்டனர். அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண் உயிரை பணயம் வைத்து குட்டையில் குதித்து ரித்திகா, மதுமிதா, தேஜா ஆகிய 3 பேரையும் மீட்டார். சசிக்குமாரும் வந்து கடைசியாக ஆழப்பகுதியில் சிக்கிகொண்ட திவ்யாவை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். ஆனால் திவ்யா இறந்துவிட்டாள்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு