பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட பல்சார் என்160 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 164.82 சிசி ஆயில் கூல்டுஇன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 15.68பிஎச்பி பவரையும், 14.65 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. டூயல் சானல் ஏபிஎஸ், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ சஸ்பென்ஷன், புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய டிஜிட்டல் டிஸ்பிளே ஆகியவை உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.4 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சார் என் 160 வரிசையில் அதிக விலையுள்ள வேரியண்ட் இதுதான். சுசூகி ஜிக்ஸர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 4வி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும்.
பஜாஜ் பல்சார் என் 160
previous post