ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் சத்திய ஷீலா வழக்கு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயில் திருவிழாவில் நடந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் சத்திய ஷீலா ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 22-ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கோயில் திருவிழாவில் ராமர் என்பவரை சிலர் தாக்கியதில் உயிரிழந்தார். ராமர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிந்த நிலையில் தன் மீதும் புகார் எழுந்ததாக மனுதாரர் புகார் அளித்தார். தன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது; இது ஏற்கத்தக்கது அல்ல என்றும் வாதம் வைக்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 13-க்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது