பைக்காரா, தொட்டபெட்டா பகுதிகளுக்கு ஆட்டோக்கள் இயக்குவதை தடுக்க வேண்டும்: சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

 

ஊட்டி, ஏப்.25: பைக்காரா மற்றும் தொட்டபெட்டாவிற்கு ஆட்டோக்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சி கேப் ஓட்டுநர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதரத்தை காப்பற்ற வேண்டும் என பல்வேறு ேகாரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளோம். ஆனால், இன்று வரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட தூரத்தை காட்டிலும் ஆட்டோக்கள் செல்கின்றன. பைக்காரா, குன்னூர் மற்றும் தொட்டபெட்டா ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான ஆட்டோக்கள் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு செல்கின்றன.

இதனால், அரசுக்கு பல ஆயிரம் வரி செலுத்தும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பாதித்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர். எனவே, பைக்காரா மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு ஆட்டோக்கள் இயக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்