பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் புதிய தலைவராக ஆனந்தன் தேர்வு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் புதிய தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் புதிதாக கட்டி வந்த வீடு அருகே கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் இதுவரை 11க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் அவரின் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தன் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் பேகன்ஜி மாயாவதியின் விரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில் கட்சியின் மத்திய ஒருங்கினைப்பாளர்கள் அசோக்சித்தார்த் மற்றும் கோபிநாத் தலைமையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும், மாநில தலைவராக ஆனந்தன் அவர்களையும் மாநில துணை தலைவராக இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் அவர்களையும் நியமித்துள்ளார். மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு