பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் அதில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 பேரும் பூந்தமல்லி கிளை சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவந்து சிறையில் அடைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 11-ம் தேதி இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பகுதிக்கு அழைத்து சென்றபோது திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து மீதமுள்ள 10 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த 10 பேரிடனும் போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை வைத்து குற்றப்பத்திரிக்கை தயாரித்து வருகின்றனர்.

Related posts

கோவை விமான நிலைய விரிவாக்கம்: 472 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு

2 மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் சேவைக்கு 2 லட்சம் பேர் மாற்றம்

சட்டசபை மோதலுக்கு மத்தியில் ஒடிசாவில் ‘டான்ஸ்’ பார்களுக்கு தடை: மாநில அமைச்சர் அறிவிப்பு