வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல புரோக்கர் பாட்ஷா பாய் கைது: ஓராண்டு தேடலுக்கு பின் சுற்றிவளைப்பு

சென்னை: மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னையில் உள்ள நிறுவனங்களில், ஆன்லைன் மூலம் வேலை தேடும் பட்டதாரி இளம்பெண்களிடம், பிரபல நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக, கடந்த 2022ம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் ஆண்டாள் குப்பம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ரியாஸ் (எ) பாட்ஷா பாய் (39) என்பவர், இதில் முக்கிய குற்றவாளியாக இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்ய முயன்றனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து, அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி பெருங்குடி எம்.ஜி.ஆர்.மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய திண்டுக்கல் சுத்துவார்பட்டி பகுதியை சேர்ந்த குட்டி (எ) கண்ணப்பன் (24), தேனி மாவட்டம் தென்கரை பகுதியை சேர்ந்த ஜமால் முகமது (எ) அஜ்மல்கான் (36), திருவான்மியூர் பகுதியை சேர்ந்த துரையப்பா (43), திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த இம்தாத் பாஷா (எ) இம்ரான் (23) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரபல புரோக்கர் ரியாஸ் (எ) பாட்ஷா பாய் மூலம் இவர்கள் பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. மேலும், பாட்ஷா பாய் மும்பை உள்ளிட்ட பகுதியில் தங்கி, இளம் பெண்களை மட்டும் தமிழ்நாட்டில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையில் தனிப்படை போலீசார், செல்போன் சிக்னல் மூலம் பாட்ஷா பாயை கண்காணித்து நேற்று முனதினம் அதிகாலை அவரை போரூர் அருகே கைது செய்தனர். இவர், பல பாலியல் புரோக்கர்களிடம் நேரடி தொடர்பில் இருப்பதால், 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்