பளபள சருமத்திற்கு பாதாம் எண்ணெய்!

*சருமத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு வீட்டு உபயோக பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.
*தினமும் காலையில் குளிப்பதற்கு ½ மணி நேரம் முன்பு சிறிதளவு பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு குளியல் போடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.
*உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையங்களை போக்கி சரும பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாரை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழி வகுக்கும்.
*ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். இந்த செயல் முறை முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். பளிச் தோற்றத்தைத் தரும்.
*ஒரு வாழைப்பழம் இரண்டு டீஸ்பூன் தேங்காய்பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக குழைத்து முகத்தில் பூசவும். உலர்ந்ததும் முகம் கழுவினால் பொலிவு கிடைக்கும். கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் குழைத்து பூசிவர முகச் சுருக்கம் நீங்கும்.
– ஆ. ஜெயசீலிராணி

Related posts

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு? ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது