மாரடைப்பு காரணமாக ஒன்றிய மாஜி அமைச்சர் மரணம்


மும்பை: முன்னாள் ஒன்றிய மற்றும் மாநில அமைச்சரான பாபன்ராவ் தக்னே, உடல்நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர் பாபன்ராவ் தக்னே (86), மாரடைப்பு காரணமாக அகமதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜில்லா பரிஷத் உறுப்பினர் பதவியில் இருந்து ஒன்றிய அமைச்சர் வரை தனது அரசியல் பயணம் மேற்கொண்ட அவரது மறைவுக்கு மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநில பொதுப்பணித் துறை இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், சட்டப் பேரவை துணைத் தலைவர், பீட் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் பாபன்ராவ் தக்னே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்