பா.ஜ. தலைவர் அண்ணாமலை டிவிட் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழை போற்றி வணங்குவோம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டிவிட்: முன்னாள் பிரதமரும், பாஜ நிறுவனர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான, பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று(நேற்று). சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் நம் தேசத்தின் எதிரிகளை தோற்கடித்தவர். தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது. வாஜ்பாய் பிறந்த தினம், கடந்த 2014ல் பிரதமர் நரேந்திரமோடியால், தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய்க்கு மரியாதை செய்யும் வகையில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது