அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையாயின. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் பிரசித்தி பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் இந்த சந்தையில் ஆடுகள் மட்டுமல்லாமல் கோழிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இன்று காலையிலேயே சந்தையில் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு ஆடு, கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இன்றைய சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்