ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 தேதிகளில் 1,175 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்.9 மற்றும் 10 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்.9ம் தேதி புதன்கிழமை அன்று 225 பேருந்துகளும், அக்.10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று 880 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, ஆகிய இடங்களுக்கு அக்.9ம் தேதி 35 பேருந்துகளும் அக்.10ம் தேதி 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர்ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து அக்.9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு