அயோத்தி கோயில் திறப்பு விழா ஜன 22ல் கொல்கத்தாவில் நல்லிணக்கப்பேரணி: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் ஜன.22ம் தேதி கொல்கத்தாவில் அனைத்து மதத்தினருடன் நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ ஜன.22ம் தேதி கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் காளி தேவியை தரிசனம் செய்து பூஜை செய்வேன். அதன்பிறகு அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்பேன். கும்பாபிஷேகம் நடத்துவது அரசியல்வாதிகளின் வேலை அல்ல. அது பூசாரிகளின் வேலை ’ என்றார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்