தீ தடுப்பு சாதனம் பயன்படுத்துவது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா, தேர்த் திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கோயிலுக்கு வந்து பக்தர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் தேரினை வழிநடத்தும் தேரோட்டிகள் என்று அனைவருக்கும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள், கோயிலில் குறிப்பிட்ட இடத்தில் தீயை பற்றவைத்து அதனை பக்தர்கள் எவ்வாறு வந்து அணைப்பது என்பது குறித்து செய்து காண்பித்தனர். மின்சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது, கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்த வழிமுறைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பக்தர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் எட்வின், முன்னணி தீயணைப்பாளர் இளங்கோ, இரவீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!!