விழிப்புணர்வு போஸ்டர் மேக்கிங் போட்டி: அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ரட் ரிப்பன் போஸ்டர் மேக்கிங்க் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து சுவரொட்டி தயாரிப்பதற்கான ரட் ரிப்பன் போஸ்டர் மேக்கிங் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் எம்.தனுஷ்கோடி முதல் பரிசு பெற்றார்.

கடம்பத்தூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி 2ம் இடமும், திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் 3ம் இடமும் பிடித்தனர். முதல் பரிசு வென்ற கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.தனுஷ்கோடியை தலைமை ஆசிரியர் குமாரிகுட்டி, உதவி தலைமை ஆசிரியர் ஜாய்ஸ்ராணி, ஓவிய ஆசிரியர், தேசிய மாணவர்படை அலுவலர் அருணன், சாரணர்படை அலுவலர் பழனி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை