சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருதுகள்

சென்னை: உலக மனிதவள மேம்பாட்டு கூட்டமைப்பு நடத்திய 18வது மாநாடு தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை பிராண்ட் விருதுகளில் 2023க்கான சிறந்த பணியமர்த்தல் பிராண்ட் மற்றும் மனித வளத்திற்கான சிறந்த பங்களிப்புகள் என்ற பிரிவில் 2 விருதுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை நிறுவனத்தின் சார்பாக நிதி இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா பெற்றார்.

கூடுதல் பொது மேலாளர் வினோத் குமார், மேலாளர் ரஞ்சித் மற்றும் துணை மேலாளர் ரகுராமன் உடனிருந்தனர். அமெரிக்கா பெர்க்‌ஷர் மீடியா எல்எல்சி, நகர்ப்புற போக்குவரத்துத் துறையில் மனிதவள சிறந்த நடைமுறைகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ‘சிறந்த மனித வளத்துறை கையாளுதல், மனிதவள நடைமுறைகளை வளர்ப்பதில் முதன்மையான மெட்ரோ ரயில் சேவைகள்’ என்ற விருது பெறப்பட்டது. இந்த விருதுகள் சென்னை மெட்ரோ ரயிலின் மனிதவளத்துறையின் சாதனையைக் குறிக்கின்றன.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா