ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா: நிறுவன தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை: கவரப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி வளாகத்தில் மனித வளங்கள் – மாற்றம் மற்றும் வளர்ச்சி என்ற தலைப்பில் எஸ்2எஸ் மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையர் பிரியகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து, தலைமை உரையாற்றினார்.

விழாவில் நிறுவனங்களின் பல்வேறு சிறந்த செயல்பாடுகளுக்காக ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், கேப்ளின் பாயின்ட் நிர்வாக இயக்குநர் பார்த்திபன், சிப்காட்டில் உள்ள தொழில்துறை வளாக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இன்போசிஸ் லிமிடெட் வணிகத் தலைவர் சுஜித்குமார், ஆர்கனைசேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் சென்டர் பார் எக்ஸலன்ஸ் தீனதயாளன், என்ஐபிஎம் நிர்வாக இயக்குநர் எம்.எச்.ராஜா, ரானே குழும தலைவர் வெங்கடநாராயணன், டிஐஎல்எஸ் இயக்குனர் ரமேஷ்குமார், ப்ரோமெட்டோ கன்சல்டிங் லிமிடெட் இயக்குனர் வசந்தகுமார், மிட்சுபா மனிதவள துணை பொது மேலாளர் ராஜரத்தினம், எல்அண்டுடி எச்ஆர் ஹெட் மாலினி சரவணன், எமரால்டு துணை மேலாளர் பரத்குமார், ஐஎன்டியுசி செயல் தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் ஆர்எம்கே கல்வி குழுமங்களின் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், ஆலோசகர் பழனிச்சாமி, தொழில் மேம்பாட்டு மையத்தின் டீன் சிவஞான பிரபு, கல்லூரி முதல்வர்கள் முகமது ஜுனைட், ராமர், லட்சுமணன், டீன்கள் தியாகராஜன், சிவராம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜரத்தினம், பி.ரவிக்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் ராஜகோபாலன் நன்றி கூறினார்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை