கரூர் மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோருக்கு விருது

 

கரூர், ஜூலை 31: கரூர் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் விருதுக்கு, தகுதியுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்ளூர், வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண விமான பங்களிப்பாளர், சிறந்த தங்கும் விடுதி, உணவகம், சிறந்த வழிகாட்டி, சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், சுற்றுலா தொடர்பான கூட்டம், மாநாடு அமைப்பாளர், சுற்றுலா குறித்து சமூக ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர்,

தமிழக சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா ஊககுவிப்பு மற்றும் விளம்பர கருத்து, சுற்றுலா விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள், சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ம் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து, ஆகஸ்ட் 15ம்தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 04324-256257 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து