திமிறும் காளைகள்… திமில் பிடித்து அடக்கும் வீரர்கள்… அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று தொடக்கம்

மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2-ம் சுற்று தொடங்கியது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மதுரை ஆட்சியர் தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்று ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று நிறைவு பெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் : 50, காளைகள் : 100 பங்கேற்றனர்.

சிறந்த மாடுபிடி வீரர்கள்:

1) மஞ்சள் சீருடை எண் 32 – தேனி மாவட்டம் சீலையம்பட்டி முத்துகிருஷ்ணன் – 6 காளைகள்

2) மஞ்சள் சீருடை எண் 26 – அவனியாபுரம் பகுதியை சேர்ந்த திருப்பதி – 3 காளைகள்

3) மஞ்சள் சீருடை எண் 1 – அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மணி – 3 காளைகள் அடக்கியுள்ளனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை