அவல்வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்

1/2 கப் வெள்ளை அவல்
1/4 கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
1/2 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
8-10 முந்திரி
2 டேபிள் ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை, உப்பு-தேவைக்கு.

செய்முறை

முதலில் பயத்தம்பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அவலை எடுத்து தண்ணீரில் நன்றாகக் கழுவி கொஞ்சம் தண்ணீருடன் அப்படியே 5 நிமிடம் ஊற விடவும். ஸ்டவ்வில் வாணலியை வைத்து நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி சேர்த்து வறுக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் பயத்தம் பருப்பு மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறிய பிறகு ஊற வைத்த அவல் சேர்த்து நன்றாகக் கிளறி கலந்து விடவும். அவல் நன்றாக ஊறி பஞ்சு போல் இருக்கும். அவ்வளவுதான் அவல் பொங்கல் தயார்.

 

Related posts

பீட்ரூட் ரைஸ்

பீட்ரூட் வடை

பீட்ரூட் ரசம்